ஜான்வி கபூர்
பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான இவர் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.
முதல் தென்னிந்திய படத்திலேயே ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்தார். இதை தொடர்ந்து தற்போது ராம் சரணுடன் நடித்து வருகிறார். இயக்குனர் புச்சி பாபு இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ஆர் சி 16.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். ராம் சரணுடன் ஜான்வி இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவே.
உபாசனா கொடுத்த பரிசு
இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூருக்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா உணவு சம்மந்தப்பட்ட சிறப்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். ஜான்வி கபூரை சந்தித்து உபாசனா பரிசு வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க..