Friday, April 11, 2025
Homeசினிமாநடிகை பூஜா ஹெக்டேவின் அடுத்த தமிழ் படம்.. 52 வயது நடிகருக்கு ஜோடி

நடிகை பூஜா ஹெக்டேவின் அடுத்த தமிழ் படம்.. 52 வயது நடிகருக்கு ஜோடி


பூஜா ஹெக்டே

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் அடுத்ததாக ரெட்ரோ படம் தமிழில் வெளிவரவுள்ளது. சமீபத்தில் இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளிவந்தது.

இதில் பூஜா ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் அவர் போட்ட ஸ்டப் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரெட்ரோ படத்தை தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். பீஸ்ட் படத்திற்கு பின் மீண்டும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.

பிரஷாந்துக்கு ஜோடியாக பூஜா

இந்த நிலையில், பிஸியான நாயகியாக இருக்கும் பூஜா ஹெக்டே அடுத்ததாக டாப் ஸ்டார் பிரஷாந்துக்கு ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரஷாந்த் அடுத்ததாக இயக்குநர் ஹரி இயக்கத்தில் தனது 55வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டேவின் அடுத்த தமிழ் படம்.. 52 வயது நடிகருக்கு ஜோடி | Pooja Hegde Pair Up With Prashanth

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரஷாந்துக்கு ஜோடியாக பூஜா நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments