மகாநதி சீரியல்
பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
அப்படி அவரது இயக்கத்தில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் மகாநதி.
அப்பாவை இழந்த 4 அக்கா-தங்கைகளின் கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் கடந்த 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கியது, இதுவரை 443 எபிசோடுகளுக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கிறது.
கடைசியாக கதையில் யமுனா-நிவின் திருமணம் பல பிரச்சனைகளுக்கு இடையில் நடந்து முடிந்துள்ளது.
பிறந்தநாள்
இந்த நிலையில் மகாநதி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை வென்றுள்ள லட்சுமி ப்ரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. இன்று அவருக்கு பிறந்தநாள், எனவே மகாநதி சீரியலில் நடிக்கும் சிலர் அவரது வீட்டிற்கு சென்று கேக் வெட்டியுள்ளனர்.
அந்த வீடியோவை லட்சுமி ப்ரியா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.