சிங்கப்பெண்ணே
பெண்களை தைரியமாக காட்ட வேண்டும், ஒரு புரட்சி ஏற்படுத்த வேண்டும் என சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் நிறைய வித்தியாசமான கதைகளை எழுதுகிறார்கள்.
அப்படி சின்னத்திரையிலும் பெண்களை மையப்படுத்தி, அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள் குறித்து நிறைய விஷயங்கள் காட்டப்படுகிறது.
சன் தொலைக்காட்சியில் சிங்கப்பெண்னே, கயல், இனியா, சுந்தரி என பெண்களை மையப்படுத்திய தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அதில் டாப்பில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் தொடர் என்றால் சிங்கப்பெண்ணே தான்.
இன்றைய புரொமோ
தற்போது சிங்கப்பெண்ணே தொடரின் இன்றைய புரொமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நந்தாவை ஆனந்தி கொலை செய்துவிட்டார் என போலீசார் கைது செய்த விஷயம் அன்பு, மகேஷ் மற்றும் அவரின் தோழிகள் கடும் ஷாக்கில் உள்ளனர்.
ஆனந்தியை இந்த பிரச்சனையில் இருந்து அன்பு எப்படி காப்பாற்றப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.