ஜூனியர் என்டிஆர்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். ஆஸ்கார் வென்ற ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்திருந்தார்.
தற்போது, கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜான்வி கபூர், சைஃப் அலிகான் உள்ளிட்டவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தேவரா என்ற படத்தில் நடித்துள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விஜய் குறித்து பேசிய என்டிஆர்
அப்போது,ஜூனியர் என்டிஆர் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார்.
அதில், “நடனம் என்பது மிகவும் அழகான ஒரு விஷயம் அது சண்டை போடுவது போலவோ, ஜிம்னாஸ்டிக் செய்வது போலவோ இருக்கக்கூடாது.
இயல்பாக ஆட வேண்டும் அதனை நடிகர் விஜய் சிறப்பாக செய்து வருகிறார். அவரது நடனத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன்.
நாங்கள் முன்பு நல்ல நண்பர்களாக இருந்தோம், அடிக்கடி பேசிக்கொள்வோம் சமீப ஆண்டுகளாக தங்களுக்குள் தொடர்பு இல்லை” என்று ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.