நானும் ரவுடி தான்
இன்றைய தேதியில் பரவலாக பேசப்பட்டு வரும் திரைப்படம் நானும் ரவுடி தான். நயன்தாரா – தனுஷ் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், நானும் ரவுடி படம் குறித்து பேச்சு பரவலாகியுள்ளது.
2015ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் நானும் ரவுடி தான். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, தனுஷ் தயாரித்து இருந்தார்.
இப்படத்தில் இணைந்து பணிபுரிந்தபோது தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
முதலில் நடிக்கவிருந்த நடிகர்
இந்த நிலையில், நானும் ரவுடி படத்தில் ஹீரோவாக முதலில் நடிக்கவிருந்தது விஜய் சேதுபதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை கவுதம் கார்த்திக் தானாம். பின் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக, இறுதியாக தான் விஜய் சேதுபதி இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.