உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கடந்த 17 ஆம் திகதி முதல் நேற்று வியாழக்கிழமை (20.03.25) நண்பகல் 12 மணிவரை நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக சுமார் 2,900 குழுக்கள் போட்டியிடுவதாகவும், அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை 2,260 அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,900 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களில் சுமார் 425 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் குழுவால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. வேட்புமனு நிராகரிக்கப்பட்டதன் பின்னர், நிராகரிக்கப்பட்ட ஒவ்வொரு குழுவுக்கும் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களுடன் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படும்.” என்றார்.