சந்தியா ராகம்
சன் மற்றும் விஜய் டிவிகளுக்கு பிறகு சீரியல்களில் வெற்றிநடைபோடும் தொலைக்காட்சியாக உள்ளது ஜீ தமிழ்.
இந்த தொலைக்காட்சியிலும் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி ஜீ தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் சந்தியா ராகம்.
சந்தியா, ஜகர்லாமுடி, அன்டாரா சவர்னாகர், பாவனா லாஸ்யா, ராஜீவ் பரமேஸ்வர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
அன்டாரா பேட்டி
இந்த தொடரில் மாயா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அண்டாரா.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில், சந்தியா ராகம் சீரியலுக்காக நான் ஆடிஷன் வந்திருந்தபோது தெலுங்கில் ஒரு சீரியல் நடித்து வந்தேன். இந்த சீரியலில் நடிக்க தேர்வானபோது கால்ஷீட் பிரச்சனை வந்தது.
இதனால் தெலுங்கு சீரியலில் இருந்து விலகிவிட்டு இந்த சீரியலில் கமிட் ஆனேன். இப்போது மக்கள் எனது பெயரை விட கதாபாத்திர பெயரை வைத்து தான் என்னை அழைக்கிறார்கள்.
சொந்த வாழ்க்கை பற்றி கூற வேண்டும் என்றால் நான் ஒருவரை காதலித்தேன், அவர் எனது பிறந்த நாளுக்கு அழகாக வாழ்த்துக்களை சொல்லி ஐ லவ் யூ சொன்னார். ஆனால் அந்த காதல் பிரேக் அப் ஆகிவிட்டது, இனி காதல் திருமணம் பற்றி யோசிக்கும் எண்ணம் இல்லை.
ஒருவேளை வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார் மீடியாவில் இருப்பவர் வேண்டாம், காரணம் நான் ரொம்ப பொசசிவ் என பேசியுள்ளார்.