Thursday, December 26, 2024
Homeசினிமாநான் செத்தால் கூட இப்படி அனைவரும் நினைக்க வேண்டும்.. உருக்கமாக பேசிய நெப்போலியன்

நான் செத்தால் கூட இப்படி அனைவரும் நினைக்க வேண்டும்.. உருக்கமாக பேசிய நெப்போலியன்


நெப்போலியன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் நெப்போலியன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 100க்கும் மேற்பட்ட வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர். இவருக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில், இவருடைய மூத்த மகன் தனுஷ்க்கு தசை சிதைவு நோய் இருப்பதால் நெப்போலியன் சினிமா மற்றும் அரசியலில் இருந்து விலகி தன் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.


இந்த நிலையில், நெப்போலியன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

நெப்போலியன் பேச்சு

அந்த வீடியோவில் அவர் பேசுகையில், நான் என் 16 வயது முதல் அரசியலில் நுழைந்துவிட்டேன் என் மாமா அமைச்சராக இருந்தபோது அவருக்கு பிஏவாக நான் இருந்தேன்.

நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததால் நான் நடிக்க தொடங்கினேன்.

ஆனால் தற்போது என் மகனுக்காக இரண்டையும் விட்டு விலகி தற்போது, அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறேன் என்று கூறினார்.

மேலும், என் அப்பா மற்றும் அம்மாவிற்காக மணிமண்டபத்தையும் கட்டி இருக்கிறேன்.

நம்மை சுற்றி இருப்பவர்களை நாம் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும். நான் செத்தால் கூட இப்படி ஒரு மனுஷன் நம்மோடு வாழ்ந்துட்டு போயிருக்காரு அவ்வாறு அனைவரும் நினைக்கும் அளவிற்கு வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

நான் மட்டுமின்றி மற்றவர்களும் அவ்வாறு தான் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். 

நான் செத்தால் கூட இப்படி அனைவரும் நினைக்க வேண்டும்.. உருக்கமாக பேசிய நெப்போலியன் | Actor Napolean Talked About His Dream

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments