Thursday, December 26, 2024
Homeசினிமாநான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு திருமணம் தான்..

நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு திருமணம் தான்..


ஸ்வர்ணமால்யா

குணச்சித்திர வேடங்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையில் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே என்ற ஒரு க்ளாசிக் படத்தில் நாயகி ஷாலினியின் அக்காவாக தனது சிறந்த நடிப்பை கொடுத்து பிரபலமானவர் ஸ்வர்ணமால்யா.

அதனை தொடர்ந்து, இவர் எங்கள் அண்ணா, யுகா, மொழி, பெரியார், அழகு நிலையம் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார். இவர் கடைசியாக புலிவால் என்ற படத்தில் நடித்தார். அந்த நேரத்தில் இவரை பற்றி பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், இவர் சினிமாவை விட்டு விலகினார்.

நடிகையின் பேச்சு


இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்வர்ணமால்யா தான் சிறுவயதில் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை, அந்த முடிவை ஒரு நல்ல எண்ணத்தில் தனது பெற்றோர் எடுத்தார்கள். அதனால் தான் நான் சிறுவயதில் திருமணம் செய்து கொண்டேன்.

திருமணம் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் அவ்வாறு நடக்கவில்லை, அதற்காக நான் யாரிடமும் விளக்கம் கொடுக்க தேவையில்லை, நேரம் தான் வீணாகும் என்று கூறினாராம்.

நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு திருமணம் தான்.. உண்மையை உடைத்த அலைபாயுதே நடிகை ஸ்வர்ணமால்யா | Actress Swarnamalya Talks About Her Life



மேலும், நான் இயக்குனர் மணிரத்னம் போல் அனைவரும் நல்ல குணத்துடன் இருப்பார்கள் என்று நினைத்து விட்டேன். அதனால் எனக்கே தெரியாமல் அந்த மாறி ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டிருக்கிறேன்.



அந்த படத்தில் பத்து நிமிடங்கள்தான் நடித்தேன். அப்போது தான் எந்த அளவிற்கு முட்டாளாக இருந்தேன் என்றும், என் வாழ்வில் நான் இந்த மாறி படத்தில் நடித்ததை விட திருமணம் செய்ததை தான் மிகப்பெரிய தவறாக நினைக்கிறேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments