அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என கைவசம் இரண்டு திரைப்படங்களை வைத்துள்ளார்.
இதில் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கியது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளும் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது என கூறப்படுகிறது.
அன்ஸீன் வீடியோ
அஜித்தின் அன்ஸீன் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் ரசிகர்கள் பலரும் பார்த்திராத நடிகர் அஜித் படகு ஓட்டி வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ..
இவ்வளவு நாளா எங்கயா இருந்தது இந்த வீடியோ..தல 😍😘
ஹிந்தில தல என்ன சொல்றாரு🧐
Enhanced vocals…pls translate🙏..na pathukurenu solrara😁#AjithKumar 👑 #Arrambam#Vidaamuyarchi #GoodBadUgly pic.twitter.com/mqH8hYHWju
— Jayaveluⱽᶦᵈᵃᵃᴹᵘʸᵃʳᶜʰᶦ (@itis_JJ) June 12, 2024