Sunday, December 22, 2024
Homeசினிமாபடப்பிடிப்பே முடியவில்லை! அதற்குள் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம்

படப்பிடிப்பே முடியவில்லை! அதற்குள் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம்


குட் பேட் அக்லி

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.



அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து இப்படத்தை ஆதிக் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா தான் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது. அதே போல் மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில், நட்டி நட்ராஜ் ஆகியோரும் நடித்து வருகிறார்களாம். இளம் நடிகை ஸ்ரீலீலாவும் இப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல் விமர்சனம்


இந்த நிலையில், படம் குறித்து விமர்சனம் ஒன்று வெளியாகியுள்ளது. என்னடா இது, படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை, அதற்குள் எப்படி விமர்சனம் என்று தான் பார்க்கிறீர்கள்.



பிரபல மருத்துவர் ஒருவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் படம் குறித்து தனது விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பே முடியவில்லை! அதற்குள் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம் | Good Bad Ugly Movie First Review Viral On Net

“Fanboy சம்பவம் எப்படி இருக்கும்னு காலத்துக்கும் பேசுற மாதிரி குட் பேட் அக்லி படம் இருக்கும். குட் பேட் அக்லி முதல் பாதி தெறிக்கவிட்டதற்கு நன்றி!! All d best for second half bro என பதிவு செய்துள்ளார். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments