வாழை படம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான திரைப்படம் வாழை.
இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக படம் அமைந்துள்ளது. இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உண்மை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் உணர்ச்சி ரீதியாக உடைந்துவிடும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது.
அடுத்த பாகம்
இந்த நிலையில் வாழை படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும்போது, மாரி செல்வராஜ் யாருனு தெரிஞ்சிக்க தான் எடுக்கப்பட்ட படம் வாழை, இதன் 2ம் பாகம் வர வாய்ப்பு இருக்கிறது.
இதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு, அது இன்னும் நான் யாருனு உங்களுக்கு புரிய வைக்கும் என கூறியுள்ளார்.