பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம்,வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.