முன்னணி நடிகை
சினிமாவில் இப்பொழுது இருக்கும் ரஜினி முதல் வளர்ந்து வரும் நடிகர்கள் வரை பலர் நிராகரிப்புகளை எதிர்க்கொண்டு தான் சினிமாவில் சாதிக்கிறார்கள்.
அப்படி பல தடைகளையும், கஷ்டங்களையும் எதிர்க்கொண்டு தற்போது தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நடிகையாக இருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா.
நடிகையின் பேட்டி
ராஷ்மிகா சினிமாவில் நுழைந்த நேரத்தில் பல அவமானங்களை சந்திக்க, அதைப்பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் ராஷ்மிகா 20 முதல் 25 ஆடிஷன்களில் கலந்து கொண்டதாகவும், ஆனால் அவரை நடிகை போல் பார்க்க தெரியவில்லை என கூறி நிராகரித்து விட்டதாகவும் கூறினார்.
இவ்வாறு பல நிராகரிப்புகளையும், அவமானங்களையும் கடந்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது, தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக இருக்கிறார்.
இவரது நடிப்பில் கடைசியாக பாலிவுட்டில் வெளிவந்த அனிமல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து, ராஷ்மிகா தற்போது அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.
அதைத்தொடர்ந்து மேலும் இரண்டு பாலிவுட் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் தமிழில் தனுஷ் நடிக்கும் குபேரா படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.