ஏ.ஆர். முருகதாஸ்
நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக முத்திரை பதித்தார்.
பின் கேப்டன் விஜயகாந்துடன் கைகோர்த்து ரமணா படத்தை இயக்கி தனது வெற்றி பயணத்தை சினிமாவில் தொடர்ந்தார். கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஒவ்வொரு படத்திலும் பட்டையை கிளப்பினார்.
மேலும் தற்போது இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் தான் SK 23. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பாலிவுட் சூப்பர்ஸ்டாரான சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் படத்தையும் இயக்கி வருகிறார்.
சொத்து மதிப்பு
இன்று இயக்குனர் ஏ.ஆர். முருதாஸுக்கு பிறந்தநாள் என்பதால் திரையுலக சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இயக்குனர் முருகதாஸின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 72 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.