மகாராஜா
இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படம் மகாராஜா. இப்படம் சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்டு வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
வசூல் சாதனை
ஏற்கனவே உலகளவில் ரூ. 110 கோடி வசூல் செய்திருந்த மகாராஜா திரைப்படம், சீனாவில் இதுவரை ரூ. 95 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இதுவரை மகாராஜா படத்தின் மொத்த வசூல் ரூ. 205 கோடி வசூலை எட்டியுள்ளது.
சீனாவில் ரூ. 95 கோடி வசூல் செய்துள்ளதன் மூலம், மகாராஜா படம் பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. ஏனென்றால் பாகுபலி 2 திரைப்படம் சீனாவில் ரூ. 80 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
அதனை மகாராஜா படம் தற்போது முறியடித்து சீனா பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி வசூல் செய்து மேலும் ஒரு சாதனையை மகாராஜா, சீனாவில் படைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.