பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு சில புதுமுகங்களுடன் தொடங்கப்பட்ட சீரியல் பாக்கியலட்சுமி.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் கதையில் இப்போது பாக்கியாவை வீழ்த்தும் வேலையை செய்து வருகிறார் கோபி. அதன் முதல் வேலையாக பாக்கியாவின் ஹோட்டலை இழுத்து மூட வைத்திருக்கிறார்.
இந்த பிரச்சனையில் இருந்து பாக்கியா எப்படி வெளியே வரப்போகிறார் என்பது தெரியவில்லை.
ரீல் ஜோடி
இந்த தொடரில் சில நடிகர்களின் கதாபாத்திர மாற்றம் நடந்துள்ளது. அதில் செழியன் கதாபாத்திரத்தில் முதலில் ஆரியன் நடித்து வந்தார். பின் அவர் வெளியேற இப்போது விகாஸ் சம்பத் செழியன் வேடத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு ஜோடியாக ஜெனி கதாபாத்திரத்தில் திவ்யா என்பவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்துவரும் விகாஸ் சம்பத் மற்றும் திவ்யா கணேஷ் இருவரும் நிஜ வாழ்க்கையில் இணைய இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
விரைவில் திருமணம் குறித்தும் அவர்கள் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.