பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, ஒரு காலத்தில் விஜய் டிவியின் டிஆர்பியை டாப்பிற்கு கொண்டு வந்த தொடர்.
பாக்கியலட்சுமி என்ற குடும்ப தலைவியை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரில் அடுத்தடுத்து பரபரப்பாக கதைக்களம் அமைந்து வருகிறது. ராதிகா உயிருக்கு அவரது மாமியாரால் ஆபத்து என அவரது அம்மா கொடுத்த பொய் புகார் மயூவால் வழக்கே மாறியது.
ஈஸ்வரியும் எந்த தவறும் செய்யாதவர் என்று நீதிமன்றம் அறிவித்தது. அந்த பிரச்சனை முடிந்த நேரத்தில் இப்போது இனியாவால் பிரச்சனை வந்துள்ளது. அவர் வீட்டில் பொய் சொல்லிவிட்டு பார் செல்ல அதனால் பிரச்சனை வெடித்துள்ளது.
சதீஷ் பரபரப்பு
இந்த தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றிருப்பவர் நடிகர் சதீஷ். கோபி கதாபாத்திரத்தில் வாழும் சதீஷ் தற்போது ஒரு பரபரப்பு தகவல் கூறியுள்ளார்.
அதாவது, சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார் சதீஷ். கடந்த 2023ல் அறுபடை முருகன் கோயிலுக்கு சென்றபோது சதீஷ்குமார் உடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு பெண்மணி விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால் சதீஷ் புகைப்படம் எடுக்க மறுத்ததால் செல்போனில் தொடர்புகொண்டு தொடர் மிரட்டல் விடுகிறாராம். அதோடு சூனியம் வைத்து விடுவதாகவும் மிரட்டல் விடுகிறாராம்.