நடிகை ரித்திகா
பாக்கியலட்சுமி, ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பான தொடர்.
இப்போது தொடரில் ராமமூர்த்தி இறப்பு காட்சிகள் வந்தன, அடுத்து கோபியின் பழிவாங்குதல் கதைக்களம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்றைய எபிசோடில் கோபி-இனியாவை சமாதானம் செய்கிறார், குடிக்கவும் செய்கிறார்.
அதேபோல் பாக்கியா வீட்டில் இருந்து எழில் கிளம்புகிறார், இதனால் அனைவரும் இன்னும் துக்கத்திற்கு ஆளாகிறார்கள்.
குழந்தை
இந்த பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தாவாக முதலில் நடித்து வந்தவர் ரித்திகா. பின் இவருக்கு திருமணம் நடக்கவே தொடரில் இருந்து விலகினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ரித்திகாவிற்கு கடந்த செப்டம்பர் 10ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
அழகான குழந்தையின் புகைப்படத்துடன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை ரித்திகா.