விஜய் டிவியின் பிக் பாஸ் 8ம் சீசன் இந்த வார இறுதியில் தொடங்க இருக்கிறது. அதனால் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் தற்போது இருந்து வருகிறது.
சினிமா நடிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் வர இருக்கின்றனர். ஏற்கனவே உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியவந்துவிட்டது எல்லோருக்கும் தெரியும்.
புது லிஸ்ட்
தற்போது வந்திருக்கும் புது தகவல்களின் படி பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் விஷால், விஜய் டிவி காமெடியன் TSK உள்ளிட்டோர் லிஸ்டில் இணைந்து இருக்கின்றனர்.
மேலும் சவுண்ட் சரோஜா ரோலில் நடித்து பிரபலம் ஆன ஐஸ்வர்யா பாஸ்கரன் பிக் பாஸ் வர போகிறாராம்.
தற்போது புது லிஸ்ட் விவரம் இதோ..
- விஷால் (பாக்கியலட்சுமி நடிகர்)
- ஐஸ்வர்யா பாஸ்கரன்
-
TSK (காமெடியன்) - விடிவி கணேஷ்
- கோகுல்நாத் (மானாட மயிலாட புகழ் டான்சர், நடிகர்)
- பால் டப்பா (பாடகர்)
- சௌந்தர்யா நஞ்சுண்டன் (நடிகை)
- தர்ஷிகா (பொன்னி சீரியல் நடிகை)
- தர்ஷா குப்தா (கவர்ச்சி நடிகை)
- சுனிதா (குக் வித் கோமாளி காமெடியன்)
- சஞ்சனா (மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்தவர்)
- அன்ஷிதா (செல்லம்மா சீரியல் நடிகை)
- அர்னவ் (செல்லம்மா சீரியல் ஹீரோ)
- அன்பு (நடிகர் மயில்சாமி மகன்)