எம்புரான்
சினிமா துறையில் இப்போதெல்லாம் நடிகர்கள் இயக்குனராக, இசையமைப்பாளர்கள் நடிகராக என களமிறங்குகிறார்கள்.
அப்படி பிரபல நடிகராக வலம்வந்த ப்ருத்விராஜ் இயக்குனராகவும் தன்னை நிரூபித்து வருகிறார். அண்மையில் ப்ருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க எம்புரான் திரைப்படம் வெளியாகியுள்ளது.
2019ம் ஆண்டு வெளியான லூசிஃபர் திரைப்படத்தின் 2ம் பாகமாக எம்புரான் திரைப்படம் வெளியாகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
கடந்த மார்ச் 27ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 67 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மலையாள சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் செய்யாத வசூல் சாதனை இது.
2 நாள் முடிவில் படம் ரூ. 100 கோடியை தாண்டி சாதனை மேல் சாதனை புரிந்து வருகிறது.