மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பாதகமான சம்பவங்கள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், தாய்லாந்தில் உள்ள இலங்கையர்கள் அவசர நிலையின் போது கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு வௌிவிவகார அமைச்சு கோரியுள்ளது.
இவ்விரு நாடுகளிலும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதால், தாய்லாந்தில் உள்ள இலங்கையர்கள் +66 812498011 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சுமார் 200 இலங்கையர்கள் மியன்மாரில் தங்கியிருப்பதாகவும், மற்றொரு இலங்கையர் குழு தாய்லாந்தின் பேங்கொக்கில் தங்கியிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.