பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான உறுதிச்சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வியமைச்சு விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை இந்த உறுதிச்சீட்டு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.