சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் டாப் சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசையில் தற்போது பாட்டியின் பிறந்தநாள் கொண்டாடட்டம் களைகட்டி வருகிறது.
இதில் தன்னுடைய பிறந்தநாள் அன்று தன் மனதை கவரும் வகையில் பரிசு யார் தருகிறார்களோ, அவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என பாட்டி கூறியிருந்தார்.
இதனால் அண்ணாமலை வீட்டில் உள்ள அனைவரும் பாட்டியின் மனதை கவர்ந்து அந்த பரிசை வெல்ல வேண்டும் என முயற்சி செய்து வந்தனர். இதில் முத்து – மீனாவை தவிர மற்ற அனைவரையும் பரிசு கொடுத்துவிட்டனர்.
மாஸ் என்ட்ரி கொடுத்த முத்து
இந்த நிலையில், மனோஜ் அந்த பரிசு என்ன என்று பாட்டியிடம் கேட்க, முத்து இன்னும் வரவில்லையே என பாட்டி கூறுகிறார். முத்து குடித்துவிட்டு தள்ளாடி நாளை காலை தான் வருவான் என திமிராக மனோஜ் கூற, மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் முத்து.
முத்து – மீனா கொடுக்கப்போகும் பரிசு என்ன? தங்க நகைகள் எப்படி கவரிங் நகையாக மாறியது என்பது குறித்த உண்மை எப்போது வெளிவரப்போகிறது என அடுத்த வாரம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.