பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
5 வருடங்களுக்கு மேலாக அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் தொடராக ஒளிபரப்பாகி வர முடிவுக்கும் வந்தது.
தற்போது அதே பெயரில் 2வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த முறை அப்பா-மகன்கள் பாசத்தை உணர்த்தும் தொடராக உள்ளது.
ஆரம்பத்தில் டிஆர்பியில் வெற்றிபெறவில்லை என்றாலும் இப்போது தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
பிறந்தநாள்
இந்த தொடரில் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகும் கதாபாத்திரமாக உள்ளது சரண்யா துரடி நடிக்கும் மயில் கதாபாத்திரம். ஆனால் மெல்ல மெல்ல ரசிகர்கள் அவரது கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் செட்டில் நடிகை சரண்யாவின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாக ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.