மஞ்சு வாரியர்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தமிழில் அசுரன், துணிவு, போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் மஞ்சு வாரியர். அசுரன் படத்திற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினையும் பெற்றார்.
அதனைத்தொடர்ந்து, இவர் தற்போது விடுதலை 2 மற்றும் மிஸ்டர் எக்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். நேற்று இவர் நடிப்பில் ஃபுட்டேஜ் என்ற திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த படத்திற்கு பல நட்சத்திரங்கள் பாராட்டியும் வருகின்றனர். அந்த வகையில் ஃபுட்டேஜ் படத்தின் சிறப்பு காட்சியில் பங்கேற்ற இயக்குனர் அனுராக், இந்த மாறி ஒரு படம் எடுப்பதற்கு கண்டிப்பாக தைரியம் வேண்டும் எனவும், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் எனவும் கூறினார்.
இழப்பீடு கேட்ட நடிகை
இந்த நிலையில், ஃபுட்டேஜ் படத்தில் நடித்த சீத்தல் தம்பி என்பவர் மஞ்சு வாரியரிடம் ரூ. 5.75 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், மஞ்சு வாரியரின் நிறுவனம் தயாரித்த ஃபுட்டேஜ் என்ற படத்தில் நடிக்கும்போது தனக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதற்கு முக்கிய கரணம் போதுமான பாதுகாப்பு இல்லாததால் தான் எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், அந்த சிகிச்சைக்கு பல லட்சம் செலவானதாகவும் ஆனால், அவ்வளவு ரிஸ்க் எடுத்தும் அந்த படத்திற்கு சம்பளமாக எனக்கு ரூ.1.80 லட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.