ராஜமௌலி
தெலுங்கு சினிமாவின் முக்கிய இயக்குனராக இருப்பவர் எஸ்.எஸ். ராஜமௌலி. பல படங்களை இயக்கி இருந்தாலும் இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்து வசூலில் சாதனை படைத்தது.
இந்த நிலையில், இவர் அடுத்து ஒரு பான் World படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்க இருக்கும் நிலையில், மற்ற நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் இயக்குனர் ஈடுபட்டு உள்ளாராம்.
இவர்கள் அனைவரும் நடிக்கிறார்களா
இந்த படம் பான் World படம் என்பதால் உலக சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் மற்றும் நடிகைகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தமிழ் துறையில் இருந்து விக்ரம், மலையாளத்தில் இருந்து மோகன் லால் மற்றும் பிருத்விராஜ், தெலுங்கு துறையில் இருந்து நாகர்ஜுனா மற்றும் பாலிவுட்டில் இருந்து தீபிகா படுகோனே என பலர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் சினிமாவில் இருந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகர் கிரிஸ் ஹெமஸ்வொர்த் மற்றும் ஒரு வெளிநாட்டு நடிகையை தேர்வு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிரிஸ் ஹெமஸ்வொர்த் Avengers-ல் வரும் Thor கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஆவார். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.