Sunday, December 22, 2024
Homeசினிமாபாலிவுட்டில் பட வாய்ப்பு கிடைக்க இதுதான் காரணம்!! நடிகை டாப்ஸி பேட்டி

பாலிவுட்டில் பட வாய்ப்பு கிடைக்க இதுதான் காரணம்!! நடிகை டாப்ஸி பேட்டி


டாப்ஸி

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘ஆடுகளம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.


இதனை அடுத்து இவர் தமிழில் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சன 3 போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இவர் நடித்த பிங்க், கேம் ஓவர் போன்ற ஹிந்தி படங்கள் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது.

தற்போது முடாஸர் அஜீஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் ‘கெல் கெல் மேய்ன்’ என்ற படத்தில் டாப்ஸி முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11 ம் தேதி வெளியாகவுள்ளது.

பேட்டி!!



அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட டாப்ஸி -யிடம் பாலிவுட் படங்களில் நடிக்க எப்படி வாய்ப்பு வந்தது என்று கேள்வி கேட்கப்பட்டது.




இதற்கு பதில் அவர், ”நான் நடிகை பிரீத்தி ஜிந்தாவின் சாயல் இருந்ததால் என்னை அழைத்தார்கள். அவரின் புதிய பதிப்பாக என்னை நினைத்தார்கள். இதனால் தான் எனக்கு பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் நடிகை பிரீத்தி ஜிந்தாவை விவேகமான மற்றும் புத்திசாலித்தனமான நடிகையாக பார்க்கிறேன்”.

“அவர் சாயலில் சினிமாவிற்கு வந்ததால், அவரது பெயரை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணத்தில் அவரை போல இருக்க கடினமாக முயற்சித்தேன்” என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.   

பாலிவுட்டில் பட வாய்ப்பு கிடைக்க இதுதான் காரணம்!! நடிகை டாப்ஸி பேட்டி | Actress Taapsee Open Talk

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments