திரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா தற்போது விடாமுயற்சி, ராம், விஸ்வபரா என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் லியோ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் GOAT படத்தில் இணைந்துள்ளார். ஆனால், ஜோடியாக அல்ல ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடியுள்ளார் என கூறப்படுகிறது.
தென்னிந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை திரிஷா அடுத்ததாக பாலிவுட் செலவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
சல்மான் கான் – திரிஷா
பாலிவுட் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் The Bull எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் சல்மான் கானின் ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஸ்பெயின் நாட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கப்போகிறது என்றும் Cameron Bryson என்பவர் தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய போகிறார் என்றும் கூறப்படுகிறது. Cameron Bryson பேமிலி மேன் வெப் தொடரில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.