Sunday, December 22, 2024
Homeசினிமாபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரிடம் அத்துமீறல்.. அதிர்ச்சி சம்பவம்!!

பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரிடம் அத்துமீறல்.. அதிர்ச்சி சம்பவம்!!


ஷ்ரத்தா கபூர்

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான ஆஷிகி 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்தார்.

இப்படத்தை தொடர்ந்து ஏக் வில்லன், ஹைதர், பாகி, சிச்சோர், ஸ்ட்ரீ மற்றும் து ஜூதி மைன் மக்கார் உட்பட பல வெற்றிகரமான படங்களில் நடித்தார்.

அத்துமீறல்..



சமீபத்தில் ஷ்ரத்தா கபூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அங்கு இருந்து வெளியே வந்தபோது, அவரை காண ரசிகர்கள் கூடினார்கள்.

அந்த இடத்தில் பெண்களிடம் ஷ்ரத்தா கபூர் பேசி விட்டு நகர்ந்தபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். அப்போது சிலர் புகைப்படம் எடுக்க முயன்றனர். சிலர் அத்துமீறியும் தொட்டனர்.

அதிக அளவில் கூட்டம் கூடியதால் பாதுகாவலர்களால் தடுக்க முடியவில்லை. கடைசியில் ஒரு வழியாக ஷ்ரத்தா கபூரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரிடம் அத்துமீறல்.. அதிர்ச்சி சம்பவம்!! | Shraddha Kapoor Fans Abused Her

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments