Saturday, December 21, 2024
Homeசினிமாபாலிவுட் படத்தில் வில்லனாக என்ட்ரி கொடுக்கப்போகும் சூர்யா.. செம மாஸ்

பாலிவுட் படத்தில் வில்லனாக என்ட்ரி கொடுக்கப்போகும் சூர்யா.. செம மாஸ்


சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரவிருந்த நிலையில், அதிலிருந்து ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.


இதனால் நவம்பர் மாதம் தான் கங்குவா திரைப்படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. இது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்து வருகிறது.

வில்லனாகும் சூர்யா 


இந்த நிலையில், சூர்யா பாலிவுட் திரையுலகில் வில்லனாக என்ட்ரி கொடுக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்பட்ட திரைப்படம் தூம். இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளது. அபிஷேக் பச்சன், ஹ்ரித்திக் ரோஷன், அமீர் கான் என ஆகியோர் நடித்துள்ளனர்.

பாலிவுட் படத்தில் வில்லனாக என்ட்ரி கொடுக்கப்போகும் சூர்யா.. செம மாஸ் | Suriya To Act Villan Role In Bollywood



தூம் படத்தின் 4வது பாகம் உருவாகவுள்ள நிலையில், இப்படத்தில் வில்லனாக சூர்யா நடிக்கப்போகிறார் என சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை சூர்யாவிடம் நடந்து வருகிறதாம். விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அறிவிப்பும் வெளியாகும் என தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments