Friday, April 18, 2025
Homeசினிமாபிக்பாஸ் தர்ஷன் கைது சந்தோசமாக இருந்தது, ஆனால்.. நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் தர்ஷன் கைது சந்தோசமாக இருந்தது, ஆனால்.. நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு வீடியோ


பிக் பாஸ் புகழ் தர்ஷன் தற்போது சென்னையில் தங்கி தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இன்று கார் பார்க்கிங் தொடர்பான பிரச்சனையையில் நீதிபதியின் மகன் மற்றும் தர்ஷன் இடையே கைகலப்பு ஏற்ப்பட்டதாகவும் அது பற்றி இரண்டு தரப்பும் போலீசில் புகார் மாறி மாறி புகார் அளித்து இருக்கிறது.

தர்ஷனை தற்போது போலீசார் கைது செய்து இருக்கின்றனர். ஆனால் நீதிபதியின் மகன் மற்றும் அவர் குடும்பம் மீது எந்த நடவடிக்கையும் போலீஸ் எடுக்கவில்லை.

சனம் ஷெட்டி வீடியோ

பல வருடங்களுக்கு முன்பு பிக் பாஸ் தர்ஷன் மற்றும் நடிகை சனம் ஷெட்டி இடையே நடந்த பிரச்சனை எல்லோருக்கும் தெரிந்தது தான். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், பிக் பாஸ் செல்லும் வாய்ப்பையே தர்ஷனுக்கு சனம் ஷெட்டி தான் பெற்று கொடுத்தாராம். ஆனால் அந்த ஷோவுக்கு சென்று வந்த பிறகு தர்ஷன் சனம் ஷெட்டியை திருமணம் செய்ய மறுப்பதாக போலீசில் புகார் அளித்து, அது பெரிய சர்ச்சையாக அந்த நேரத்தில் பேசப்பட்டது.

தற்போது தர்ஷன் பார்க்கிங் பிரச்சனையில் கைதாகி இருப்பது பற்றி சனம் ஷெட்டி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

தர்ஷன் கைது என செய்தி கேட்டதும் எனக்கு ஒரு நொடி சந்தோசமாக இருந்தது. ஆனால் தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என யோசித்தேன்.

விசாரணை கூட நடத்தாமல் ஒரு தரப்பு மீது மட்டும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் வெள்ளிக்கிழமை கைது செய்திருக்கிறார்கள். விசாரணையே திங்கள் அன்று தான் நடக்கும்.

“ஹாஸ்பிடலில் இருந்து பேட்டி கொடுத்த நீதிபதி மகன் சொல்வது தான் உண்மை என்றால் சிசிடிவி காட்சியை வெளியிட்டு இருக்கலாமே. தப்பு பண்ணாதவங்க தண்டனை அனுபவித்தால் அது மிகப்பெரிய குற்றம்” என சனம் ஷெட்டி தற்போது தர்ஷனுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.


வீடியோ இதோ. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments