பிக்பாஸ் ராஜு
பிக்பாஸ் நிகழ்ச்சி, விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டில் ஒளிபரப்பாகும் ஒரு ஷோ.
மொத்தம் 100 நாட்கள், 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், பல கேமராக்கள், நிறைய சண்டைகள், கலாட்டாக்கள், எமோஷ்னல் என எல்லாம் கலந்த கலவையாக இந்த ஷோ இருக்கும்.
கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனிற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
புதிய அப்டேட்
இந்த நிலையில் பிக்பாஸ் 5வது சீசன் டைட்டிலை ஜெயித்த ராஜு ஜெயமோகன் குறித்து சூப்பரான தகவல் வந்துள்ளது.
அதாவது அவர் கதாநாயகனாக பன் பட்டர் ஜாம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
காலங்களில் அவள் வசந்தம் என்ற படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இயக்கும் இப்படத்தில் ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன் என பலர் நடிக்கின்றனர்.
நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதைதான் படம் என்கின்றனர் படக்குழுவினர்.