பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் காதல் வயப்படுவது வழக்கமான ஒன்று தான். அதில் ஒரு சிலர் மட்டுமே திருமணம் வரை செல்கின்றனர்.
அப்படி கன்னட பிக் பாஸ் 5ம் சீசனில் டைட்டில் ஜெயித்த சந்தன் ஷெட்டி நிவேதிதா கௌடாவை காதலித்து நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
மறுபக்கம் விவாகரத்து செய்திகளும் தொடர்ந்து அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த தனுஷ் ஐஸ்வர்யாவே திடீரென விவாகரத்து செய்துவிட்டனர். அது போல ஜிவி பிரகாஷ் – சைந்தவி ஆகியோரின் விவாகரத்தும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
விவாகரத்து
விவாகரத்து செய்த பிரபலங்கள் லிஸ்ட்டில் தற்போது கன்னட பிக் பாஸ் பிரபலம் சந்தன் ஷெட்டி மற்றும் நிவேதிதா ஆகியோர் இணைந்து இருக்கின்றனர்.
அவர்கள் நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரமாக பிரிந்து இருக்கின்றனர்.
சட்டப்படி விவாகரத்து பெற்று இருப்பதாக அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.