Thursday, January 9, 2025
Homeசினிமாபிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் இவர் தான்.. உறுதியாக கூறிய போட்டியாளர்கள்

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் இவர் தான்.. உறுதியாக கூறிய போட்டியாளர்கள்


பிக் பாஸ் 8 

பிக் பாஸ் 8 கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 96 நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர்.

இந்த வாரம் யார் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரும் ஷாக் கொடுக்கும் வகையில், இதற்கு முன் வீட்டிலிருந்து வெளியேறிய எக்ஸ் போட்டியாளர்களை மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வந்துள்ளனர்.

மேலும் இந்த வார இடையிலேயே எலிமினேஷன் நடக்கப்போவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் யார் வெளியேறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர்

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த எக்ஸ் போட்டியாளர்கள், நேற்று இரவு கலந்து பேசும்போது, டைட்டில் வின்னர் குறித்து பேச்சு எழுந்தது. இதில் வெளியே அதிக வாக்குகளை வைத்திருப்பது முத்துக்குமரன் தான், ஆகையால் டைட்டில் வின்னர் அவர் தான் என ரவீந்தர் கூற, முத்துக்குமரன் தான் டைட்டில் வெல்ல போகிறார் என்பதை வெளியேறிய பலரும் கூறியிருக்கிறோம் என சாச்சனா கூறுகிறார்.

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் இவர் தான்.. உறுதியாக கூறிய போட்டியாளர்கள் | Ex Contestants Says Muthukumaran Is Title Winner

இதன்மூலம் வீட்டிற்குள் வந்துள்ள எக்ஸ் போட்டியாளர்கள் அனைவருமே முத்துக்குமரன் தான் டைட்டில் வெல்ல போகிறார் என பேசியுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் இறுதிக்கட்டத்தில் என்ன நடக்கப்போகிறது, மக்கள் யாரை வெற்றிபெற செய்யப்போகிறார்கள் என்று.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments