விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ இன்னும் ஒரே வாரத்தில் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. அடுத்த வார இறுதியில் செப்டம்பர் 6ம் தேதி பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற இருக்கிறது.
அதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
விபத்து
பிக் பாஸ் செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வட மாநில தொழிலாளர் ஒருவர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து இருக்கிறார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருக்கிறார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாயின் கான் என்ற தொழிலாளர் தான் விபத்தில் சிக்கியவர் என தெரிய வந்திருக்கிறது.
பிக் பாஸ் தொடங்கும் முன்பே நடந்த விபத்து பரபரப்பை ஏற்ப்படுத்தி இருக்கிறது.