ஜான்வி கபூர்
பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்கள் விலை உயர்ந்த பிராண்ட் கார்களை வாங்கி வைத்து அழகு பார்ப்பதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர். அதுபோல, பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் விலை உயர்ந்த கார்களை வாங்கி அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல இந்தி நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பிரபல நடிகையுமான ஜான்வி கபூர் மிகவும் விலை உயர்ந்த லக்சூரி கார் மாடல்களில் ஒன்றான லெக்சஸ் நிறுவனத்தின் எல்எம் 350எச் (LM 350h) காரை பயன்படுத்தி வருகின்றார்.
இந்த கார் மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்று அதாவது, இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 3 கோடிக்கும் அதிகமாம். கிளாசிக் தோற்றத்தை கொண்ட இந்த கார் பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் பயன்பாட்டு விஷயத்திலும் சொகுசு கப்பல்களுக்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது.
கிண்டல் செய்யும் இணையவாசிகள்
இந்த நிலையில், பல வசதிகளை கொண்ட இந்த சொகுசு காரின் கதவு ஆட்டோமேட்டிக் என்பதை அறியாமல் கதவை மூட ஜான்வி கபூர் திணறிக்கொண்டு இருக்கும் வீடியோ தற்போது, இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த செயலுக்கு இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.