கல்கி 2898 ஏடி
பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்ற படம் கல்கி 2898 ஏடி. இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் தற்போது நெட்ஃபிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோவில் உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின், பிரபாஸ் மற்றும் அமிதாப்பச்சனுடன் பணியாற்றிய அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
பிரபாஸின் மிகப்பெரிய ரசிகர்
அது பற்றி அவர் கூறுகையில், பிரபாஸ் அமிதாப்பச்சனின் தீவிரமான ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், அமிதாப்பச்சன் பிரபாஸின் மிகப்பெரிய ரசிகர் என்றும், பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் பாகம் ஒன்றை அமிதாப்பச்சன் இரண்டு முறை பார்த்ததாகவும் கூறினார்.
இதை கேட்டவுடன் இயக்குனர் அதிர்ச்சி அடைந்து விட்டதாகவும், அமிதாப்பச்சனுடன் ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் பிரபாஸ் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.