விஜய் மாநாடு
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி அனைவரும் பிரம்மிக்கும் அளவிற்கு நடந்தது விஜய்யின் மாநாடு.
அரசியலில் என்ட்ரி கொடுக்கப்போகிறேன் என்று கூறியதில் இருந்து ஒவ்வொரு விஷயமாக பார்த்து பார்த்து செய்து வருகிறார்.
முதலில் கட்சி பெயர், அடுத்து கொடி, கடைசியாக தனது கொள்கைகளை கூறியிருக்கிறார்.
அவரது கட்சி சார்பில் நடந்த முதல் மாநாடு பற்றிய பேச்சு தான் இப்போது தமிழகத்தில் அதிகம் உள்ளது.
ரஜினி பேச்சு
இன்று அக்டோபர் 31, இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் படு கோலாகலமாகி உள்ளது.
இந்த ஸ்பெஷல் தினத்தில் தனது வீட்டின் வெளியே வந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
அப்போது விஜய்யின் மாநாடு குறித்து கேட்க, அதற்கு அவர், விஜய் தவெக மாநாட்டை மிகப்பெரிய வெற்றியாக நடத்தி உள்ளார், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.