மூன்று முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு எதிராக பிரித்தானியா விதித்த தடைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று (26) பிற்பகல் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பான நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சு இன்று பிற்பகல் அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.