ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக வேட்டையன் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.
அக்டோபர் மாதம் வெளிவரவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா படத்திற்காக வாங்கிய சம்பளம்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று பிரியா. எஸ்.பி. முத்துராமன் இயக்கி இப்படத்திற்காக ரஜினிகாந்த் ரூ. 1,10,000 சம்பளமாக வாங்கினாராம். இதுதான் அவர் முதன் முதலில் லட்சத்தில் சம்பளம் வாங்கிய படமும் பிரியா தான் என ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.