Saturday, December 21, 2024
Homeசினிமாபிரேமம் படத்தில் முதன் முதலில் மலர் டீச்சராக நடிக்கவிருந்த சாய் பல்லவி இல்லையா! வேறு யார்...

பிரேமம் படத்தில் முதன் முதலில் மலர் டீச்சராக நடிக்கவிருந்த சாய் பல்லவி இல்லையா! வேறு யார் தெரியுமா


பிரேமம்

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படம் பிரேமம். இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்தார்.



மேலும் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் இடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இப்படத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதாபாத்திரம் என்றால் அது நடிகை சாய் பல்லவி ஏற்று நடித்த மலர் டீச்சர் தான். மலர் டீச்சர் மற்றும் நிவின் பாலி இடையே உள்ள காதல் காட்சிகள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.

மலர் டீச்சர்



இந்த நிலையில், இந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சாய் பல்லவி கிடையாதாம். பிரபல நடிகை அசின் தான் இப்படத்தில் முதன் முதலில் மலர் டீச்சராக நடிப்பதாக இருந்தாராம்.

பிரேமம் படத்தில் முதன் முதலில் மலர் டீச்சராக நடிக்கவிருந்த சாய் பல்லவி இல்லையா! வேறு யார் தெரியுமா | Sai Pallavi Is Not First Choice For Premam Movie


இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் “பிரேமம் படத்தில் வரும் மலர் டீச்சர் கதாபாத்திரம் மட்டஞ்சேரியை சேர்ந்தவராக முதலில் எழுதினேன். அதற்காக முதலில் இப்படத்தில் அசினை நடிக்க வைக்க முயற்சி செய்தோம். ஆனால், மலர் கதாபாத்திரம் தமிழாக மாறியபின் சாய் பல்லவியை நடிக்க வைத்தோம்” என அவர் கூறியுள்ளார். 

பிரேமம் படத்தில் முதன் முதலில் மலர் டீச்சராக நடிக்கவிருந்த சாய் பல்லவி இல்லையா! வேறு யார் தெரியுமா | Sai Pallavi Is Not First Choice For Premam Movie

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments