நடிகர் பிரேம்ஜிக்கு இன்று திருத்தணி முருகன் கோவிலில் இந்து என்ற பெண் உடன் திருமணம் நடைபெற்றது. இது சிம்பிளாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளும் திருமணம் என இயக்குனர் வெங்கட் பிரபு கூறி இருந்தார்.
திருமணம் நடந்து முடிந்து இருக்கும் சூழலில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன.
பிரேம்ஜி மனைவி பின்னணி
பிரேம்ஜிக்கு மனைவியாகி இருக்கும் இந்து பற்றிய முழு விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகாமல் தான் இருக்கிறது.
இது காதல் திருமணம் அல்ல, பெற்றோர் பேசி ஏற்பாடு செய்த திருமணம் தான் என திருமணத்தில் பங்கேற்ற பாடகர் ஸ்ரீராம் கூறி இருக்கிறார்.
பிரேம்ஜியின் மனைவி இந்து சேலத்தை சேர்ந்தவர் என்றும், வங்கி துறையில் பணியாற்றுகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.