நடிகர் ரஜினிகாந்த்
சினிமாவில் தற்போது முன்னணி நாயகனாக வலம் வரும் ரஜினிகாந்த் கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலே வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற இவர் தொடர்ந்து, பல படங்களில் வில்லன் ரோலில் நடித்தார்.
ரஜினிகாந்தின் ரீமேக் படங்கள்
இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த ரஜினிகாந்த் ரீமேக் படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார்.
அந்த வகையில், பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் நடித்த ‘டான்’ படத்தின் ரீமேக்கான ‘பில்லா’ படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார்.
அதை தொடர்ந்து, ‘குத்-தாரின்’ ரீமேக்கான ‘படிக்காதவன்’, ‘நமக் ஹலால்’ படத்தின் ரீமேக்கான ‘வேலைக்காரன்’, ‘காஸ்மே வாதே’ படத்தின் ரீமேக்கான ‘தர்மத்தின் தலைவன்’ மற்றும் ‘லாவாரிஸ்’ படத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘பணக்காரன்’ போன்ற ரீமேக் படங்களில் ரஜினி நடித்துள்ளார்.
இந்த அனைத்து படங்களும் வசூல் ரீதியாக மாஸ் காட்டியது. இதனால், தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் கொடிக்கட்டி பறந்தார் ரஜினிகாந்த்.
தற்போது, ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் இருவரும் இணைந்து ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.