சன்-விஜய்
வியாழக்கிழமை வந்துவிட்டால் சின்னத்திரை ரசிகர்கள் முதலில் கவனிப்பது சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளின் சீரியல்கள் டிஆர்பி விவரத்தை தான்.
சுவாரஸ்யமான கதைக்களம், தரமான புரொமோஷன், நடிகர்கள் தேர்வு போன்ற விஷயங்கள் தான் ஒரு சீரியலுக்கான ரசிகர்களை உருவாக்குவது.
அப்படி இரண்டு தொலைக்காட்சியிலும் மிகவும் தரமான கதைக்களம் கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. பழைய தொடர்கள் முடிவுக்கு வர புத்தம் புதிய தொடர்களும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
டிஆர்பி விவரம்
தற்போது கடந்த வாரம் சூப்பராக ஓடிய தொடர்களின் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது. அதில் நேரம் மாற்றப்பட்டாலும் டிஆர்பியில் புதிய உச்சத்தை தொட்டு டாப் இடத்தை பிடித்துள்ளது சன் டிவியின் சிங்கப்பெண்ணே தொடர்.
சரி சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் டாப் சீரியல்கள் டிஆர்பி விவரத்தை காண்போம்.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள், ஆஹா கல்யாணம்
சன் டிவி சிங்கப்பெண்ணே, மருமகள், கயல், வானத்தை போல, மல்லி