சித்தார்த்-அதிதி
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சாக்லெட் பாயாக வலம் வந்தவர் சித்தார்த்.
அப்படத்திற்கு பிறகு மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் நடித்தவர் பிரவுதேவா இயக்கிய நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டனா படத்தின் மூலம் தெலுங்கிலும் நுழைந்தார்.
பின் தொடர்ந்து இரண்டு மொழிகளிலும் படங்கள் நடித்தவர் பாலிவுட்டிலும் படங்கள் நடிக்க தொடங்கினார்.
பல வெற்றிப்படங்கள் கொடுத்து வந்த சித்தார்த் இப்போது தனித்துவமான கதைகள் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார், கடைசியாக இவரது நடிப்பில் வெளியான சித்தா படம் நல்ல வரவேற்பு பெற்றது.
சொத்து மதிப்பு
நடிகர் சித்தார்த் இப்போது நடிகை அதிதி ராவை காதலித்து வருகிறார், சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
அண்மையில் ஹிந்தியில் வெளியான Heeramandi படத்தில் அதிதி ராவ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ள நிலையில் இவர்களின் சொத்து மதிப்பு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது நடிகர் சித்தார்த்தின் நிகர மதிப்பு சுமார் ரூ. 70 கோடி என்று கூறப்படுகிறது.
அதிதி ராவின் சொத்து மதிப்பையும் சேர்த்து இருவரின் சொத்து மதிப்பு ரூ. 130 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.