கயல் சீரியல்
சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் கயல்.
சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவரும் இந்த தொடர் அப்பாவை இழந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்ட கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
வாரா வாரம் டிஆர்பியிலும் கெத்து காட்டி டாப்பில் இருந்து வருகிறது.
புதிய சாதனை
வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் தற்போது புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. அதாவது ரசிகர்களின் பேராதரவை பெற்றுவரும் கயல் சீரியல் 1000 எபிசோடுகளை எட்டியுள்ளதாம்.
இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் கயல் சீரியல் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.