பிக் பாஸ் 8
பிக் பாஸ் 8ல் இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முதலில் பெண்கள் அணி ஹோட்டல் ஊழியர்களாகவும், ஆண்கள் அணி விருந்தினர்களாகவும் இருந்தனர்.
பின் பெண்கள் அணி விருந்தினர்களாகவும், ஆண்கள் அணி ஊழியர்களாகவும் மாறினார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் ஸ்டார் ஹோட்டலின் மூன்றாவது நாளான இன்று இரு அணிகளையும் ஒன்றாக இணைந்துள்ளார் பிக் பாஸ்.
ப்ரோமோ
இதுவரை ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடந்த ஹோட்டல் டாஸ்கில், சிறந்து விளங்கியவர்கள் விருந்தினர்களாகவும், சிறப்பாக விளையாடாதவர்கள் ஊழியர்களாகவும் மாறியுள்ளனர்.
ஆண்கள் அணி vs பெண்கள் அணி என சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது இரு அணிகளையும் இணைத்து பிக் பாஸ் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். இனி இந்த ஹோட்டல் டாஸ்க் எப்படி செல்லப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..