புஷ்பா
புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், பாடல் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் இன்னும் ஷூட்டிங் முடியாத காரணத்தால், இந்த வருடம் டிசம்பர் 6ம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.
நஷ்டம்?
புஷ்பா 2 திரைப்படம் திட்டமிட்டு படி முடிக்கவில்லையாம். பகத் பாசில் இப்படத்திற்காக கொடுத்த தேதியை விட்டுவிட்டார்கள். இதையடுத்து அவர் தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார்.
புஷ்பா 2 படக்குழு டேட்ஸ் கேட்கும் போது பகத் பாசிலால் கொடுக்கமுடியவில்லை. இப்படி படப்பிடிப்பு தள்ளி போவதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு 40 கோடி ரூபாய் நஷ்டம் வரலாம் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.